விஜய் டிவியின் ச்சியர்லீடர்ஸ் இறுதி போட்டி
, வியாழன், 7 மே 2009 (15:33 IST)
ஐபிஎல் சீசன் துவங்கி வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் இந்த கோடையில், விஜய் டிவி நடத்தும் மற்றுமொரு மாபெரும் தேர்வுதான் இந்த ச்சியர்லீடர்ஸ் நிகழ்ச்சி இறுதிப் போட்டி. தமிழ்நாட்டிலுள்ள 10க்கும் மேற்பட்ட நடன கல்லூரியிலிருந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல கிரிகெட் வீரர் சடகோபன் ரமேஷ் மற்றும் மாடல் அழகியான காயத்ரி ஜெயராம் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இப்போது போட்டியில் வி-பாப், லெட்ஸ் டான்ஸ் மற்றும் சம்திங் ஸ்பெஷல் ஆகிய மூன்று அணிகளே உள்ளன. இறுதி சுற்றுக்கு இந்த மூன்று அணிகளும் இரண்டு கட்ட சுற்றுகளில் மதிப்பிடவுள்ளனர். முதற்கட்டத்தில் இவர்கள் ஏதேனும் ஒரு பொருளை வைத்து நடனமாட வேண்டும். இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில், கிராண்ட் ஃபினாலே நடைபெறும்.வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகை காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இறுதி சுற்றுக்கு சிறப்பு விருந்தினர்களாக சினிமா நடிகைகள் விறுமாண்டி புகழ் அபிராமி, சோனா ஆகியோர் பங்குபெறுகின்றனர். இவர்களோடு குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்பட நாயகர்களான ராமகிருஷ்ணன் மற்றும் தருண் ஆகியோரும் பங்குபெறுகின்றனர். சன்சில்க் ச்சியர்லீடர்ஸ் இறுதிப் போட்டியின் தொகுப்புகள் மே 08, 2009, வெள்ளி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.