மக்கள் தொலைக்காட்சியில் இன்று பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பெண்ணே நீ. ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவள் பெண். அடுத்த தலை முறையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பவள்.
அவள் பல தளங்களில் சிறகு விரித்துப் பறக்கும் ஆற்றல் பெற்றவள்.
அத்தகைய பெண்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, பெண்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்வது, பெண்களுக்கான சட்ட ஆலோசனைகளை தருவது, பெண்கள் நலம் சார்ந்த மருத்துவ ஆலோசனை தருவது என்று பெண்களின் பிரச்சினைகளையும் பெண்களின் பண்முக ஆற்றலையும் வெளிக் கொணரும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதான் பெண்ணே நீ.
இது சாதித்த பெண்களை அறிமுகம் செய்யவும், சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அதற்கான ஆலோசனை வழங்கவும், பெண்கள் உரிமைகளுக்கான தகவல்களைத் தருவதுமான நிகழ்ச்சி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யாழினி.