புதுமுகங்கள் பலரும் நடிக்கும் புதிய தொடரை ஏவிஎம் தயாரிக்க உள்ளது.
எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோர் இணைந்து ஏவி.எம். புரொடக்ஷன் சார்பில் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்கள்.
ஏவிஎம் புரொடக்ஷன் தயாரித்த வைரநெஞ்சம் தொடர் கலைஞர் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இது தவிர புதிய தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் புதுத் தொடரில் பழைய நடிகர்களுடன் சில புதுமுகக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதுமுகங்களை இந்தத் தொடரில் நடிக்க வைப்பதற்காக நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த, நடிக்க விருப்பம் உள்ள, அதே நேரம் இதுவரை எந்தத் தொடரிலும் நடிக்காத ஆண்-பெண் கலைஞர்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த தகவல் தெரிந்ததும் நடிக்க விரும்பும் புதுமுகங்கள் ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள அலுவலகத்துக்கு தங்கள் புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை குவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.