கோடை விடுமுறை துவங்கியாச்சு! வீட்டில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை குதூகலப்படுத்த ஜில்லுன்னு இந்த சம்மருக்கு விஜய் டிவி ஹலோ குட்டிச்சாத்தான்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளது.
யாரு இந்த குட்டிச்சாத்தான்? நீங்க பயப்படற மாதிரி இவன் ஒன்னும் பூதமோ பேயோ கிடையாது! குழந்தைகளுக்கு உதவி செய்யர நல்ல நண்பன்.
குட்டி என்றால் சிறுவன் அல்லது சிறுமி என்று பொருள். சாத்தான் என்றால் வேதபுத்தகங்களை நன்கு கற்றவன் என்பது பொருளாகும்.
விஜய் டிவியின் 'ஹலோ குட்டிச்சாத்தான்' நிகழ்ச்சியில் 4 சிறுவர்கள்; இவர்களுக்கு எந்நேரமும் உதவி செய்ய வருகிறான் இந்தக் குட்டிச்சாத்தான். இவனும் எல்லோரையும் போல சாதாரண சிறுவன் தான். ஆனால் பல சக்திகள் அவனுக்குள் அடங்கியிருக்கு.
இந்த அபூர்வ சக்திகளைக் கொண்டு தனக்கு கிடைத்திருக்கும் நான்கு நண்பர்களுக்கு எப்படி உதவி செய்யறான்; இவனுடைய சேஷ்டைகள் எல்லாம்தான் ஹலோ குட்டிச்சாத்தான் நிகழ்ச்சி.
வரும் ஏப்ரல் 27 முதல் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 6:30 மணிக்கு ஹலோ குட்டிச்சாத்தான் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்.