சன் நெட்வொர்க் தொலைக்காட்சி சானல்களின் வரிசையில் தற்போது ஆதித்யா என்ற சானலும் இணைந்துள்ளது.
நிகழ்ச்சிகளுக்கான டிவி, பாடல்களுக்கான டிவி, செய்திகளுக்கான டிவி, குழந்தைகளுக்கான டிவி என்ற பட்டியலில் தற்போது இணைந்திருப்பது நகைச்சுவைக்கு என்று தனி சானல்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களை சிரிக்க வைக்க வருகிறது ஆதித்யா நகைச்சுவை சானல்.