பாய்ஸ்- கேல்ஸின் நட்சத்திர நடுவர்கள்
, வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான, பாய்ஸ் வெஸ்ஸஸ் கேல்ஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரு அணிகளும் தங்களின் நடனத்திறமையை வெளிப்படுத்தி கலக்குகின்றனர்.
இவர்களின் நடனத்தை மதிப்பீடு செய்ய நடுவர்களாக தமிழ்த்திரை உலகின் பிரபல நட்சத்திரங்கள் வரவிருக்கின்றனர். திரைப்பட நடிகை நமீதாவும், நடிகர் ஸ்ரீகாந்த்தும் தான் ஆச்சி பாய்ஸ் வெஸ்ஸஸ் கேல்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரம் இந்த நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். வரும் வாரத்தில் இரு அணியினரும் சோலோ, டூயட், பெட்டிங் சுற்று, கான்செப்ட் சுற்று என பல புதுமையான சுற்றுக்களை எதிர்க்கொள்ள உள்ளனர். நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில், எந்த அணி முன்னிலையில் உள்ளனரோ அவர்கள் அடுத்த அணியினை சேலஞ் செய்வர் என்பது குறிப்பிடதக்கது.பாய்ஸ் அணியின் கேப்ட்டனாக ஜார்ஜும், கேல்ஸ் அணியின் கேப்டனாக பிருந்தா தாஸ் என அறிமுகப்படுத்தி, இரண்டு வாரங்களாக இரு அணியினரின் நடனமும் கலைக்காட்டுகிறது.
வெள்ளி மற்றும் சனி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நடன யுத்தம் ஒளிப்பரப்பாகும். வரும் பிப்ரவரி 06, 07ஆம் தேதிகளில் மாபெரும் நடனயுத்தத்தை விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்.