Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் கிங்ஸ் ஜூனியர்ஸ், சூப்பர் கிங்ஸ் ச்சியர்லீடர்ஸ்

சூப்பர் கிங்ஸ் ஜூனியர்ஸ், சூப்பர் கிங்ஸ் ச்சியர்லீடர்ஸ்
, வெள்ளி, 30 ஜனவரி 2009 (14:27 IST)
webdunia photoWD
இதுவரை எத்தனையோ ரியாலிட்டி ஷோக்களை நடத்தி புகழ்பெற்ற விஜய் டிவி இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுடன் இனைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ச்சியர் லீடர்ஸ் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.

ஜூனியர் கிரிக்கெட் வீரர்களையும், சென்னையில் நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் ச்சியர் கேல்ஸ் பாய்ஸ் களையும் தேர்வு செய்கிறது விஜய் டிவி.

இதற்கான நிகழ்ச்சி விளம்பரத்தில்தான் M.S. தோனியே கலந்துகொண்டு குழந்தைகளையும், இளைஞர்களையும் போட்டியில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தினார்.

webdunia
webdunia photoWD
இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனியர், சென்னை சூப்பர் கிங்ஸ் ச்சியர் லீடர்ஸ் நிகழ்ச்சியில் M.S. தோனியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்தவர்களான வி.பி. சந்திரசேகர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எல். பாலாஜி மற்றும் டிரம்ஸ் புகழ் சிவமணி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் உரிமையாளர்களான 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவரான ராகேஷ்சிங் பே‌சினா‌ர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மாட்ச் ச்சியர்லீடர்ஸ் இல்லாமல் முழுமையடையாது. அதற்கு தேர்ந்தவர்கள் நம் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் ஆண்களும்தான். சிறந்த 5 ஆண்/பெண் ச்சியர்லீடர்களை தேர்வு செய்யும் போட்டியை விஜய் டிவி நடத்துகிறது. அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் மாட்ச் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறச் செய்யவிருக்கிறது. இந்த தொகுப்புகள் பிப்ரவரி 20 முதல் வெள்ளி தோறும் விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஜூனியர்ஸ்களுக்கான தேர்வு பிப்ரவரி 20ல் இருந்து தொடங்கி 20 பகுதிகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இதற்கான தே‌ர்வுக‌ள் சென்னை, கோவை, திருச்சியில் நடைபெறும். 8 முத‌ல் 12 வயதிற்குற்பட்டோர் இந்த தேர்வில் பங்கேற்கலாம். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 11 குழந்தைகள் சென்னை சூப்பார் கிங் ஜூனியர்ஸ்களாக அறிவிக்கப்படுவர்.

அவர்கள் சென்னை கிரிக்கெட் போட்டியில், சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது அனைத்து மாட்ச்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு பெறுவதுடன், இந்திய வீரர்கள் சென்னையில் நெட் ப்ராக்டிஸ் செய்யும் போது அதை உடனிருந்து பார்க்கும் அறியவாய்பையும் பெறுவர்.

மேலும் இந்திய வீரர்கள் விளையாடும் ஒரு வெளி மாநில ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டியை நே‌ரி‌ல் பார்க்கும் அதிர்ஷ்டமும் அடிக்கும். இவையனைத்தும் விஜய் டிவியில் பிப்ரவரி 21ல் இருந்து ஒரு மணி நேர நிக‌ழ்ச்சியாக சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

ஸ்டார் டிவியின் தலைமை அதிகாரி உதய்சங்கர் கூறுகையில், ஐ‌பி‌எ‌ல்-லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ்சும் ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை அளிப்பது இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்நிகழ்ச்சி விஜய் டிவி வாடிக்கையாளர்களையும் பார்வையாளர்களையும் மிகவும் கவரும் என்று நம்புகிறோ‌ம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil