இல்லத்தரசிகளின் பெரும் ஆதரவோடு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சுவையோ சுவை சமையல் நிகழ்ச்சி 300-வது பகுதியை எட்டியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பிரபல சமையற்கலை நிபுணர் தாமோதரன் கிராமத்து பாணியில் முற்றிலும் மண்பாண்டங்களை கொண்டு விதவிதமான, சுகாதாரமான, உணவு வகைகளை சமைத்துக் காட்டி வருகிறார்.
சமையல் கலையை வளர்க்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 300வது பகுதியை எட்டியுள்ளது. இதில் பல வித்தியாசமான உணவு வகைகளை சமைக்கக் கற்றுக் கொடுக்கிறார் தாமோதரன்.
இந்த நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை (பிப்.5) மாலை 6.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.