சமூக பிரச்சினைகளை அக்கறையோடு எடுத்து அதனை அலசி ஆராயும் நிகழ்ச்சி சங்கப்பலகை.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த புதிய நிகழ்ச்சியில், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறுவது எப்போது, சட்ட மசோதா நிறைவேறாமல் தடுத்து வருவது எவை? இனம் ஒன்று அழிக்கப்படும்போது மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு நாட்டு நடப்புகளை கையில் எடுக்கிறது இந்த நிகழ்ச்சி.
இதில் அரசியல் நோக்கர்களும், சமூக அக்கறையாளர்களும் விவாதிக்கின்றனர்.
ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஆழமாக அலசி, அதற்கான தீர்வு என்ன என் பதை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.