விஜய் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சிகள்
, செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:54 IST)
டிசம்பர் 31ஆம் தேதி முதலே விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கிவிடுகின்றன.
ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான ஏர் பட்டீஸ், ராப் பி ஹுட், த பிரீட் ஆகிய திரைப்படங்கள் காலை 10 மணி முதல் ஒளிபரப்பாகிறது.இரவு 9 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ஒளிபரப்பாகிறது. இசைப் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.காலையில் இருந்து மங்கள இசை, லியோனியின் சிறப்பு பட்டிமன்றம், இதயம் மந்த்ரா காஃபி வித் அனு, நீயா நானா சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.
காலை 11 மணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பங்குபெறும் அப்பாவும் நானும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸுடன் மீண்டும் கஜினி உருவான கதை ஒளிபரப்பாகிறது. இதில் பாலிவுட் கதாநாயகன் அமீர்கான் பங்குபெறுகிறார்.
மதியம் 1 மணிக்கு நம்பியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நம்பியார் தி ரியல் ஹீரோ என்ற நிகழ்ச்சியும், 2 மணிக்கு சிம்புவின் சிலம்பாட்டம் படம் உருவான கதை பற்றி படக் குழுவினர் பேசுகின்றனர்.
மாலை 3 மணிக்கு ஹாலிவுட் படம் ஸ்பீடு 2 தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.