Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் டிவியில் மீண்டும் பாடும் ஆஃபிஸ்

விஜய் டிவியில் மீண்டும் பாடும் ஆஃபிஸ்
, திங்கள், 29 டிசம்பர் 2008 (12:47 IST)
webdunia photoWD
விஜய் டிவியில் கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கிய பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சி, மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஞாயிறு முதல் துவங்‌கியிருக்கிறது.

இம்முறையும் மு‌ன்ன‌ணி தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப நிறுவனங்களிலிருந்து இசையில் ஆர்வமுள்ளோர் தங்களின் பெயர்களை இப்போட்டிக்காக முன்ப‌திவு செய்துள்ளனர். இம்முறை சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அலுவலங்களிலிருந்து போட்டியாளர்கள் வந்து பங்குபெறுகின்றனர் என்பது ஒரு கூடுதல் தகவல்.

மிகவும் கடினமான பணியில் இருப்பவர்கள், தங்களின் வேலை பலுவை சற்று நேரம் இறக்கி வைத்து, உற்சாகமாக ஆடிப் பாடி இந்நிகழ்ச்சியில் பெங்குபெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள், கர்நாடக சோலோ (ஆண் / பெண்), பாப்புலர் மியூசிக் சோலோ (ஆண் / பெண் - திரையிசை பாடல்கள்), பாப்புலர் மியூசிக் க்ரூப் (ஆர்கெஸ்ட்ரா), வெஸ்டெர்ன் மியூசிக் சோலோ (ஆண் / பெண்), வெஸ்டெர்ன் மியூசிக் கிரூப் (பாண்டுடன்) போன்ற வெவ்வேறு பிரிவில் இவர்கள் பங்கெபெறுவர் என்பது குறிப்பிட‌த்தக்கது.

வளர்ந்து வரும் இசைக் கலைஞரான பாலாஜி பாடும் ஃபிஸ் 2008 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

webdunia
webdunia photoWD
பின்னனி இசையமைப்பாளர் தீனா, ஜேம்ஸ் வசந்தன், பின்னனி பாடகர்கள் சின்மயி, நரேஷ் ஐயர், உமா மகேஸ்வரி (கர்நாடக இசைக்கு), செங்கை வைத்தியநாதன் ஆகியோர் பாடும் ஆஃபிஸ் 2008ன் நடுவர்களில் சிலர்.

டிசம்பர் 28, 2008 முதல் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியி‌ல் கண்டு மகிழுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil