Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டிவியில் கி‌றிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சிகள்

Advertiesment
விஜய் டிவியில் கி‌றிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சிகள்
, புதன், 24 டிசம்பர் 2008 (15:49 IST)
webdunia photoWD
ி‌றிஸ்மஸ் திருநாளில் இறைவனின் வழிபாட்டுடன், கி‌றிஸ்மஸ் மரம், சுவையான கேக், சாக்லெட், பரிசுகள், வாழ்த்துகள் இவைகளுடன் இந்நந்நாளை கொண்டாடுவோம். நமது பிரபலங்கள் தங்கள் கி‌றிஸ்மஸை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்றும் அவர்களின் வாழ்த்துக்களை விஜய் டிவி நேயர்களுக்கு வழங்வருகிறார்கள்.

டிசம்பர் 24, மாலை 5 மணிக்கு 'ஜிங்கில் பெல்ஸ்' நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில் பிரபல இசையமைபாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் இல்லத்தில் கி‌றிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதம் பற்றி நேயர்களிடம் பேசுகின்றனர்.

webdunia
webdunia photoWD
டிசம்பர் 24 மாலை 6 மணிக்கு அழகு தேவதை நமிதா பங்குபெறும் 'சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சி இடம்பெறும். இதில் மூன்று சிறப்பு நேயர்களுக்கு நமிதாவை சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று அதிர்ஷ்டசாலிகள், செ‌ல்பே‌சி கு‌று‌ந்தகவ‌லபோட்டி மூலம் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியவற்றிற்கு அளவே இல்லாமல் அமைந்திருக்கும் இந்நிகழ்ச்சி.

ி‌றிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 அன்று காலை 8 மணிக்கு கி‌றிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் இடம்பெறும். இதில் ஏசுவை போற்றும் பாடல்கள், அருளுரை ஆகியவை இடம்பெறும். சாம் செல்லத்துரை, மோகன் ‌சி. லாசுரஸ், பா‌தி‌ரியா‌ரஜான் ஆண்டுரூஸ் ஆகியோர் கிருஸ்துமஸ் தின சிறப்பைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைப்பார்.

webdunia
webdunia photoWD
காலை 10 மணிக்கு இதயம் மந்த்ரா காஃபி ‌வித் அனு சீசன் 2வில் சிறப்பு விருந்தினர்களாக பின்னனி பாடகர்களான ஏசுதாஸ் மற்றும் அவரது மகன் விஜய் ஏசுதாஸ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இவர்கள் இருவருக்கும் சங்கீதம் எங்கனம் தங்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பதைப் பற்றியும், தந்தை-மகன் உறவு, இருவரின் கலைப் பயணம் என எல்லாவற்றையும் செவிக்கும் கண்களுக்கும் ஒரு மாபெரும் விரு‌ந்தாக அமையும் இந்நிகழ்ச்சி.

webdunia
webdunia photoWD
காலை 11 மணிக்கு 'ஸான்ட்டா கிலாஸ்' திரைப்படம் தமிழில் ஒளிபரப்பாகும். ஒரு சாதாரண ஆசாமி தனக்கு ஸான்ட்டா கிலாஸ் சக்திகள் இருப்பதை அறிந்து என்னென்ன சேட்டைகள் செய்கிறார் என்பதே படத்தின் கதை. குழந்தைகள் அல்லாது பெரியவர்களையும் குதூகலப்படுத்தும் இத்திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்!

மாலை 4 மணிக்கு 'கி‌றிஸ்துமஸ் சியர்' இடம்பெறும். தொடர்ந்து மூன்று மணி நேரம் கிருஸ்துமஸ் தின சிறப்பு பாடல்கள், ஏசுநாதர் பற்றிய கதைகள், சான்றோர்களின் அருளுரை என பல்வேறு சிறப்பு இடம்பெறுகிறது.

விஜய் டிவியின் கி‌றிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil