Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எஸ்.வி.யின் மெல்லிசை அனுபவங்கள்

Advertiesment
எம்.எஸ்.வி.யின் மெல்லிசை அனுபவங்கள்
, சனி, 20 டிசம்பர் 2008 (11:34 IST)
மெகா டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் எம்.எஸ்.வி. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் தனது இசை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இசைத் துறையில் தனக்கென தனி முத்திரைப் பதித்து சரித்திர சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் அனுபவங்களை சொல்லும் இந்நிகழ்ச்சி இசைப் பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த எம்.எஸ்.வி., அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே மெல்லிசையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மெகா டிவியில் வாரந்தோறும் சனி இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil