விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வில்லுப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஹலோ எஃப்.எம்.மில் வெளியிடப்பட்டது.
ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து, விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம் வில்லு.
இந்தப் படத்தை பிரபுதேவா டைரக்ட் செய்தார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஹலோ எஃப்.எம்.மில் நடந்தது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர் அருள்பாண்டியன் பெற்றுக் கொண்டார்.