விஜய் டிவியின் கார்னியர் ஃபுரூட்டிஸ் ஜோடி நம்பர் 1 சீசன் 3 போட்டியின் இறுதிச் சுற்று மிக சுவாரஸ்யமாக நடைபெற உள்ளது.
8 ஜோடிகளுடன் கோலாகலமாகத் துவங்கிய இந்த நடன நிகழ்ச்சியில் இப்போது இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருப்பது 4 ஜோடிகள் மட்டுமே.
இந்த 4 ஜோடிகளும் புதுமைகள் பலவற்றை தங்களின் நடனத்தில் புகுத்த கடினமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஜீவா, ஐஸ்வர்யா, தனுஷ் மற்றும் சங்கீதா ஆகியோரை நடுவர்களாகக் கொண்ட இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும்.
ராஜேஷ் - சுஹாசினி, மைக்கேல் - ஹேமா, சஞ்சய் - பூஜா, டிங்கு - சந்தோஷி ஆகியோர் இறுதிச் சுற்றுக்குப் போட்டியிடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெள்ளி, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.