Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் டிவியில் உலகத் திரை

Advertiesment
மக்கள் டிவியில் உலகத் திரை
மொழி, கதை அமைப்பு கடந்து மனித இனத்தின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டு அமைந்த உலகத்தின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களை தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சித்தான் உலகத் திரை.

காலத்தால் அழியாத சிறந்த திரைப்படங்கள் பல உலக நாடுகளின் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்கே இலக்கணமாகத் திகழும் அதுபோன்ற படங்கள் கறுப்பு வெள்ளைக் காலம் தொடகி இன்றைய காலம் வரை எடுக்கப்பட்ட அவற்றை அறிமுகம் செய்கிறது உலகத் திரை நிகழ்ச்சி.

திரைப்படம் என்ற சாதனத்தைக் கொண்டு உலகத்தையே புரட்டலாம். அவ்வாறு புரட்சியை ஏற்படுத்திய, மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த பல மொழிப் படங்களைப் பற்றிய விவரங்களை அளித்து, அவற்றைப் பார்ப்பதற்கு வழி செய்கிறது இந்த நிகழ்ச்சி.

ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil