Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோடி ந‌ம்ப‌ர் 1 சீசன் 3யின் வைல்டு கார்டு சுற்று

Advertiesment
ஜோடி ந‌ம்ப‌ர் 1 சீசன் 3யின் வைல்டு கார்டு சுற்று
ஜோடி ந‌ம்ப‌ர் 1 ‌சீச‌ன் 3‌யி‌ன் வை‌ல்டு கா‌ர்டு சு‌ற்று நாளை ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது. நேய‌ர்களு‌ம் இ‌தி‌ல் ப‌ங்கே‌ற்று த‌ங்களது வா‌க்குகளை செலு‌த்‌தி ‌சிற‌ந்த ஜோடியை‌த் தே‌ர்வு செ‌ய்யலா‌ம்.

webdunia photoWD
ஜோடி ந‌‌ம்ப‌ர் 1 சீசன் 3, சிறந்த ஜோடிகள், சிறந்த நடுவர்கள் என கோலாகலமாக கடந்த ஜூலை மாதம் 8 ஜோடிகளுடன் துவங்கியது. வாரம் தோறும் புதுமையான சுற்றுக்களுடன், பிரம்மாணட அரங்கத்தில் ஜோடிகளின் அற்புத நடனம் அரங்கேறி வருகிறது.

8 ஜோடிகளுடன் துவங்கிய இப்போட்டியில், 3 ஜோடிகளான - மைக்கெல்-ஹேமா, சஞ்சய்-பூஜா, டிங்கு-சந்தோஷி ஆகியோர் நேராக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 5 ஜோடிகளான ராஜேஷ்-சுஹாசினி, சரத்-ப்ரீத்தி, நேத்ரன்-அருணா தேவி, வெங்கட்-நிஷமற்றும் ரவீந்திரன்-பூஜஇந்த வைல்டு கார்டு சுற்றுக்கு கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு கலக்கல் நடனமாட உ‌ள்ளன‌ர்.

வைல்டு கார்டு சுற்றில் எந்த அளவிற்கு இவர்கள் தங்களின் நடனத்தில் புதுமையும், தனித்தன்மையும் காண்பித்து நனமாடுகின்றனரோ அந்த அளவிற்கு அதிக ம‌தி‌ப்பெ‌ண் கிடைக்கும்.

webdunia
webdunia photoWD
வைல்டு கார்டு சுற்றில் நடனமாடும் 5 ஜோடிகளின் நடனத்தை பார்த்து இவர்கள்தான் இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்கள் என்று நேயர்கள் முடிவு செய்து வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்று எந்த ஒரு ஜோடி வெற்றி பெறுகின்றனறோ, அவர்களே இறுதி சுற்றுக்கு நுழைய முடியும்.

இரண்டு வைல்டு கார்டு சுற்றுக்கள் உண்டு. நேயர்கள் வாக்களிப்பதற்காக ஒன்றும், நடுவர்களுக்கானது ஒன்றும் நடைபெற உள்ளது. இரண்டு சுற்றுக‌ளி‌லிருந்தும், ‌சிற‌ந்த இர‌ண்டு ஜோடிக‌ளை தேர்ந்தெடுத்து, எந்த ஜோடி வெற்றி பெறுகிறதோ, அந்த ஜோடி மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

வைல்டு கார்டு சுற்றுக்கு நடுவர்களான சங்கீதா, ஐஸ்வரியா தனுஷூடன் 'வாரணம் ஆயிரம்' திரைப்பட நாயகிகளான திவ்யா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிட‌த்தக்கது.

விஜய் டிவியில் வெள்ளி - சனி, இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஜோடி ந‌ம்ப‌ர் 1 சீசன் 3 நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil