விஜய் டிவியின் "மாயலோகம்"
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாயலோகம் தொடரில் கின்னஸ் சாதனையாளர் முனைவர் அலெக்ஸ்சாண்டரின் மாயாஜாலங்கள் இடம்பெறுகின்றன.மாயலோகம் எனும் ஒரு வானுலகத்தை 'ராஜா நாக்கிமு
க்கி' எனும் அரசர் ஆண்டு வருகிறார். அவரின் ராணி மின்னல் இடையாள், தன்னை யாராவது சிரிக்க வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனும் விருப்பத்தை அரசரிடம் கோறுகிறாள். அரசவையில் 'குள்ள' மந்திரிகள் அரசியை எவ்வளவே சிரிக்க வைக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.அவளுடைய விருப்பத்துக்கிணங்க, அப்சரா எனும் மாயக்கண்ணி பூலோகத்திலிருந்து தலை சிறந்த மாயாஜால கலைஞர்களைக் கடத்திக் கொண்டுவந்து அவர்களை மாயலோகத்தில் மாயாஜாலங்களை செய்ய வைக்கிறாள். ராணி மின்னடிடையாளின் விருப்பத்திற்கேற்ப பலவிதமான மாயாஜாலங்களும் அந்த தர்பாரில் நடைபெறுகிறது.
இதை நகைச்சுவையுடன் வழங்குவதுதான் விஜய் டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாயலோகம்.பிரம்மிக்க வைக்கும் மாஜிக் வித்தைகளில் அசாத்திய சாதனை புரிந்த இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த தலை சிறந்த மேஜிக் கலைஞர்களை விஜய் டிவியின் மாயலோகம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலை சிறந்த மேஜிக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க விஜய் டிவி ஏற்படுத்திய ஒரு பாலம் தான் இந்த மாயலோகம் நிகழ்ச்சி. பிரஹலாத ஆச்சாரியா, சுஹானிஷா, ஹாசிம், சாம்ராஜ், மித்ரா, ஜம்மு, அன்சாரி போன்ற புது கலைஞர்களின் மேஜிக் சாகசங்கள் இதில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிறு முதல் கின்னஸ் சாதையாளர் அலெக்ஸ்சாண்டரின் மாஜிக் சாகசங்கள் இடம்பெறவிருக்கிறது.2005
ஆம் ஆண்டில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மாஜிக் செய்ததில் இவர் பெயர் கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.மேலும் 12 மணி நேரம் தொடர்ந்து மெண்ட்டல் மாஜிக் செய்ததால், இவரது பெயர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மெண்ட்டல் மாஜிக் என்பது, ஒருவரின் மனதில் நினைத்திருப்பதை சரியாக யூகித்துச் சொல்வதாகும்.
வரும் ஞாயிறு ஒளிபரப்பாகும் மாயலோகம் நிகழ்ச்சியில், மேடையில் குதிரை, யானை, கார், பைக் ஆகியவை மறைந்து மீண்டும் தோன்றும் மாயஜாலத்தை செய்யவிருக்கிறார். மேலும் ஒரு பெண்ணின் உடலை இரண்டாகப் பிளந்து மீண்டும் அதனை ஒன்றாக்கும் மாயஜாலமும் இதில் இடம்பெறுகிறது என்பது நினைவிருக்கட்டும்.