சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி செல்வம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மதியம் 1.30 முதல் 2 மணி வரை ஒளிபரப்பாக்கி வந்த திருமதி செல்வம் தொடர், வரும் 17ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
மக்களின் அதீத வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதிகமான மக்கள் பார்க்கக் கூடும் நேரத்தில் இந்த தொடர் பார்ப்பதற்கு வசதியாக இந்த நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் குமரன் தெரிவித்தார்.
திருமதி செல்வம் தொடரின் கதை எழுதி இயக்குகிறார் எஸ். குமரன். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடரில் அபிதா, சஞ்சீவ், வடிவுக்கரசி உட்பட 26 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.