Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் சிங்கர் 2008ல் சமர்ப்பணம் சுற்று

Advertiesment
சூப்பர் சிங்கர் 2008ல் சமர்ப்பணம் சுற்று
டூயட் சுற்று, பிற மொழி சுற்று, யுவன் சங்கர் ராஜா ஸ்பெஷல் என பல சுற்றுக்களை கடந்து வந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 போட்டியாளர்களுக்கு இந்த வாரம் மற்றுமொரு தகுதி சுற்றாக அமையும்.

webdunia photoWD
போட்டியாளர்கள், தங்களுக்கு மிக நெருக்கமான, மனதோடு ஒன்றிய சில உறவுகளை நினைவுக் கூறும் வகையில் அவர்களுக்காக சமர்ப்பணம் செய்யும் பாடல்களை இந்த 15 போட்டியாளர்கள் பாட உள்ளனர்.

தாய், தந்தை, மனைவி, நண்பன், உடன்பிறப்புகள், உற்றார், உறவினர் என அவர்களின் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு போட்டியாளர்கள் படலை பாட உள்ளனர். இவர்கள் பாடும் போது, நடுவர்களான உன்னி கிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மூவரும் கூட தங்களை பாதித்த சம்பவங்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

தங்களின் தாய், மனைவி, உறவினர் ஆகியோரை பற்றி நடுவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் பல செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இவர்கள் பாடல் சமர்ப்பணம் செய்யும் நபரும் ‌மிக ரக‌சியமாக சூப்பர் சிங்கர் அரங்கத்திற்கு அழைக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.

webdunia
webdunia photoWD
போட்டியாளர்கள் தாங்கள் ஏன் குறிப்பிட்ட நபருக்கு பாடல் சமர்ப்பணம் செய்யப் போகிறோம் என்ற காரணத்தையும் இவர்கள் கூற வேண்டும்.

முற்றிலும் பழைய நினைவுகளை நினைவுப்படுத்தும் சமர்ப்பணம் சுற்றை வரும் நவம்பர் 10 - 12, 2008, திங்கள் - புதன், இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil