Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
தீபாவளி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் நான்கு நாட்களுக்கு மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாகிறது.

முன்னனி நட்சத்திரங்களின் வித்யாச பேட்டிகள், தீபாவளி அன்று திரைக்கு வரும் புதிய படங்கள் பற்றிய சிறப்பு கண்ணோட்டம், நட்சத்திரங்கள் அணிவகுப்பு என நான்கு நாட்களுக்கு பட்டாசு, இனிப்புகளுடன் விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்!

சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள்!

75 ஆண்டு தமிழ் திரை இசையை போற்றும் விதமாக வரும் நிகழ்ச்சிதான் 'தாம் தூம் இசைக் கொண்டாட்டம்'. அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பாடகர்களான பென்னி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி என பலர் 75 ஆண்டு தமிழ் சி‌னிமாவை உயரத்தில் நிறுத்தியிருக்கும் தமிழ் திரையிசைப் பாடல்களை செவிக்கு விருந்தளித்து வழங்க தயாராக உள்ளனர் இவர்கள். இந்நிகழ்ச்சி வெள்ளி, அக்டோபர் 24 அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.

webdunia photoWD
சிரிதளவும் பயமில்லாமல் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடிக்கும் தைரியசாலிக்கே வெற்றி மகுடம். லக்ஷ்மி ராய், விஜயலட்சுமி போன்ற நட்சத்திரங்களின் தைரியத்தை நிரூபிக்கும் விதமாக பலவிதமான சவால் செயல்களை தருவர். இவர்களின் பய அளவை அளக்க நடிகர் சிலம்பரசன் இவர்களை பலவிதமான சாலஞ்களுக்கு உட்படுத்துவார். இந்த சவாலை இவர்கள் எவ்வாறு முறியடிக்கின்றனர் என்பதை செப்டம்பர் 24, 25, 26 தேதிகளில், ஒளிபரப்பாகும் 'சாலஞ் வித் சிம்பு', இரவு 7 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

சனி, அக்டோபர் 25 அன்று இரவு 8 மணிக்கு, ஜோடி No.1 சீசன் 3ன் தீபாவளி சிறப்பு இடம்பெறும். இதில் ஜோடிகள் குழுக்கலாக தங்களை அமைத்துக் கொண்டு தங்களின் விருப்ப பாடல்களுக்கு நடனமாடுவர். வெற்றி பெரும் டீமிற்க்கு தீபாவளி சிறப்பு பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.

இரவு 10 மணிக்கு காஃபி வித் அனுவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் / நடிகர் S.J.சூர்யா மற்றும் நிலா பங்குபெறுகின்றனர்.

ஞாயிறு, அக்டோபர் 26 அன்று காலை 8 மணிக்கு பிரிமியர் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறும். காலை 9 மணிக்கு ஹாட்ஸ் ஆப் டபிரபுதேவா ‌நிக‌ழ்‌ச்‌சி இடம்பெறும். இதில் பிரபல நடனக் கலைஞரான பிரபு தேவாவிற்க்கு சமர்பிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும். பிரபுதேவாவின் நடன உதவியாளர்களான ஸ்ரீதர், அசோக் ராஜா, ஜானி, தமிழ்திரையின் தற்போதய நட்சத்திரங்கள் என எல்லோரும் பிரபுதேவா பாடல்களுக்கு நடனமாடி ஒரு சிறப்பு ‌‌நிக‌ழ்‌ச்‌சியையும் தர உள்ளனர்.

இவர்களுடன் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரான பிரகாஷ் ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பகல் 11 மணிக்கு 'ரா‌ன் இ‌ந்‌தியதி கிரேட் இந்தியன் மாஜிக் ஷோவில்' பிரஹலாத் ஆச்சாரியா அவர்கள் மிகவும் பிரமிப்பூட்டும் பல மாஜிக்குகளை உடுப்பியிலிரிந்து புரிவார் என்பது குறிப்பிடதக்கது.
நன்பகல் 12 மணிக்கு Reign of fire திரைப்படம் தமிழில் ஒளிபரப்பாகும்.

'புதிய வின்னர்கள்' எனும் தலைப்பில், கோலிவுட்டின் இளைய புது முகங்களின் நேர்காணல் ஒளிபரப்பாகும். இதில் நடிகர்கள் ஜெய், சாந்தனு மற்றும் ரமணா பங்குபெறுகின்றனர். நடிகைகளில் அஞ்சலி (கற்றது தமிழ் திரைப்படத்தின் அறிமுக நாயகி), மோனிகா, ஹாசினி ஆகியோரும் பங்குபெறுகின்றனர். இவர்களோடு புதிய இசையமைப்பாளர்களும் இடம்பெறுவர். புதிய வின்னர்கள், சனி, ஞாயிறு மற்றும் திங்கள் - 25, 26 மற்றும் 27 தேதிகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும்.

கனா காணும் காலங்கள் தொடரில் வரும் நட்சத்திரங்கள், தீபாவளி பண்டிகையை ஒரு கலகல திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதன் தொகுப்புகள் சனி, அக்டோபர் 26, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.

webdunia
webdunia photoWD
தீபாவளி திருநாளான திங்கள், அக்டோபர் 27 அன்று காலை 8 மணிக்கு மார்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த மூன்று பெண்மணிகளான தாய், மனைவி, மகளைப் பற்றி மனம் திறந்ந்து பேசுகிறார். பெண்ணின் இந்த மூன்று பரிமானங்களைப் பற்றி இவர் கூறும் 'சிவக்குமாரின் வாழ்க்கையில் தாய்-மனைவி-மகள்' நிகழ்ச்சியை திங்கள், அக்டோபர் 27 அன்று காலை 7:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்!


இந்நிகழ்ச்சியை அடுத்து வரும் நீயா? நானா? வில் தலைப்பு - "இன்றைய ஆரம்ப கல்விமுறை சரியான திசையில் செல்கிறதா, இல்லையா?. இதில் ஆசிரியர்கள் ஒரு புறமும் அரசு சாரா நிறுவண உறுப்பினர்கள் (NGO) மற்றுமொரு புறமும் இருந்து சூடான வாதங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா பங்குபெறுகின்றார் என்பது குறிப்பிட‌த்தக்கது. கல்வியின் முக்கியத்துவம், கல்விமுறை பற்றிய தனது கருத்துக்களை அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

இவரோடு பல சிறப்பு விருந்தினர்களான, இயக்குனர் ராம், எழுத்தாளர் பாமரன், மா ஃபோ‌ய் க‌‌ன்ச‌ல்ட‌ன்‌சி‌யி‌ன் உ‌ரிமையாளர் திரு.பாண்டியராஜன், வேங்கடதளபதி, மு‌ன்னா‌ளகாவ‌ல்துறை ஆணைய‌ர் திரு.விஜயகுமார் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியை வரும் தீபாவளி தினத்தன்று, அக்டோபர் 27, காலை 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்!

காலை 10 மணிக்கு 'லைட்ஸ் காமெரா கல்யாணம்' நிகழ்ச்சியில் நட்சத்திர திருமணங்களான - அஜீத் / ஷாலினி, தனுஷ் / ஐஸ்வரியா, சூர்யா / ஜோதிகா மற்றும் சிபிராஜ் / ரேவதியின் திருமண நிகழ்வுகளின் தொகுப்புகள் இடம்பெறும்.

webdunia
webdunia photoWD
இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு இதயம் மந்த்ரா காஃபி வித் அனுவில் நடிகை தேவயானி மற்றும் அவரின் தம்பி, நகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெறுகின்றனர்.

இதோடு தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்களான சிம்புவின் சிலம்பாட்டம், தனுஷின் படிகாதவன், பரத்தின் சேவல், குங்குமப் பூவும் கொஞ்சுபுறாவும், பூ பூக்கும் ஓசை, வெண்ணிலா கபடி குழு ஆகிய திரைப்படங்களின் முண்டோட்டமும் இடம்பெறும் என்பது குறிப்பிட‌த்தக்கது.

24ஆ‌ம் தே‌தி தொட‌ங்‌கி 27ஆ‌ம் தே‌தி வரை நான்கு தினங்களு‌ம் விஜய் டிவியி‌ல் ‌தீபாவ‌ளி ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் அம‌‌ர்கள‌ப்படு‌கிறது.



Share this Story:

Follow Webdunia tamil