Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் சிங்கர் 2008ன் புதிய நடுவர்கள்

சூப்பர் சிங்கர் 2008ன் புதிய நடுவர்கள்
விஜ‌ய் டி‌வி‌யி‌ன் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 போட்டியில் கடுமையான சுற்றுகளுக்கு பின்னர் 24 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே தான் இனி போட்டி நடக்க இருக்கிறது.

விஜ‌ய் டி‌வி‌யி‌ல் வரும் திங்கள் - புதன், இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 24 நபர்களும் முதன் முறையாக இந்த சீசனின் நடுவர்களான பின்னனி பாடகர்களான ஸ்ரீநிவாஸ் மற்றும் உன்னிகிருஷ்ணன் முன்பு பாட உள்ளனர்.

பின்னனி பாடகரான சுஜாதா இந்த ஆண்டின் மற்றுமொரு நடுவர். இவர் வரும் வாரம் நிகழ்ச்சியில் அ‌றிமுகப்படுத்தப்பட உள்ளார். தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் பாடகி சுஜாதா நடுவராக பங்குபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிட‌த்தக்கது.

webdunia photoWD


வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு என்பதால், முதல் தகுதி சுற்றே போட்டியாளர்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாட உள்ளனர் என்பது குறிப்பிட‌த்தக்கது.

பிரம்மாண்ட செட்டு அமைக்கப்பட்டு, மேலும் பல புதுமையான சுற்றுக்கள், ஆரோக்கியமான போட்டி என கலைக்கட்ட துவங்கிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008.

முதன் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 24 போட்டியாளர்களும் நடுவர்களை சந்திக்க இருக்கின்றனர். இனி வரும் சுற்றுக்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனை வரும் அக்டோபர் 13, 14 மற்றும் 15, திங்கள் - புதன் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் கண்டு மகிழுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil