தமிழர்களை தொலைக்காட்சி பெட்டி முன் கட்டிப்போட மேலும் ஒரு தொலைக்காட்சி, ஸீ தமிழ் நெட்வொர்க்.
இந்த வருட தொடக்கத்திலேயே தனது வேலையை தொடங்கிவிட்ட ஸீயின் தமிழ் பிரிவு வரும் ஞாயிறு 12 ஆம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளதாம்.
குஷ்பு, பாலசந்தரின் தொலைக்காட்சி தொடர்கள், நான் கடவுள் போன்ற புதிய மெகா படங்களின் ஒளிபரப்பு உரிமை என கலைஞர் மற்றும் சன்னுக்கு கடும் போட்டியுடன் களமிறங்குகிறது ஸீ டி.வி.
படத்தை தயாரித்து நாக்க முக்க போல் நிமிடத்திற்கு ஒருமுறை காதில் ஈயம் பாய்ச்சாமல் இருக்க வேண்டும் ஸீ. கடவுளை பிரார்த்திப்போம்!