கணிப்பொறியைக் கையாளும் விதங்களையும், வழி முறைகளையும் கற்றுத் தருகிறது மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கற்போம் கணினி நிகழ்ச்சி.
முன்பெல்லாம் தொலைக்காட்சி இருந்தால்தான் மதிப்பு என்று இருந்த காலம் மாறி தற்போது கணினி இருந்தால் தான் அந்த வீட்டிற்கு மதிப்பு என்ற நிலை வந்துவிட்டது.
தேவையோ இல்லையோ கணினியை வாங்கி விடுகிறோம். அவற்றை முழுமையாக நாம் கையாள தெரிந்து வைத்திருக்கிறோமோ என்றால் இல்லை.
அந்தக் கவலையைப் போக்கவே மக்கள் தொலைக்காட்சியில் கணினியின் இயக்கம் பற்றிய தமிழில் எளிதில் புரியும் வகையில், கணியத் தமிழ் அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள்.