இரண்டு மனைவி, குடும்ப சண்டை போன்றவற்றை மையமாக் கொண்டு ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மத்தியில் கனா காணும் காலங்கள், மதுரை போன்ற குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தொடர்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் தற்போது காக்கி என்ற புதிய தொடர் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு நாளும் மக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் காவல்துறை பற்றிய கதை இது. இந்த கதையில் 5 துடிப்பாள இளைஞர்கள் காவல்துறையில் ஆற்றும் மகத்தான் பணியினை மையமாகக் கொண்டுள்ளது கதைக்களம்.
மதியழகன், தமயந்தி, அர்ஜூன், ராகவன், நயனவேல், அன்புசெல்வன் ஆகிய ஐந்து காவல்துறை அதிகாரிகளின் அதிரடிக் காட்சிகள் அடங்கியதாக இருக்கும் இந்த தொடர்.
டச் ஸ்கீரீன் மீடீயா தனியார் நிறுவனம் வழங்கும் இந்த தொடரை இயக்குபவர் பிரம்மா.
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரைக் கண்டு மகிழுங்கள்.