பள்ளியில் நடக்கும் சுவையான விஷயங்களைக் அழகான மாலையாகக் கோர்த்தால் அதுதான் கனா காணும் காலங்கள் தொடர்.இந்த தொடரில் தங்களது லட்சியங்களை அடையும் பாதையை தேட 12ம் வகுப்பு படித்து முடித்து மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். எனவே அடுத்து புது மாணவர்கள் பள்ளியிர் சேர்கின்றனர்.கனா காணும் காலங்கள் தொடரில் புதிய மாணவர்கள் தேடல் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நடிப்பு மற்றும் பல்வேறு துறைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அவர்கள் சம்பந்தப்பட்ட முதல் காட்சி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இதுதான் அவர்களது அறிமுகக் காட்சியாகும்.
மேலும் கூடுதல் நகைச்சுவையுடன் விஜய் டிவி ரசிகர்களை ஆக்கிரமிக்க வருகிறது புதிய மாணவர்களுடன் கனா காணும் காலங்கள்.
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது கனா காணும் காலங்கள்.