மணமக்கள் தேடலுக்கான நிகழ்ச்சியாக சன் டிவியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வரும் கல்யாணமாலை நிகழ்ச்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
9 வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த இந்த நிகழ்ச்சி மூலம் இதுவரை 8600 திருமணங்கள் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாண மாலையின் திருமணத் திருவிழா சென்னை தி.நகர் விஜய மஹாலில் சமீபத்தில் நடந்தது. தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் முனைவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழாவில் நடிகர் பாண்டியராஜன், பிரமிட் வி.நடராஜன், முனைவர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இயக்குனர் மீரா நாகராஜன் கல்யாணமாலை மோகன் ஆகியோர் நன்றி கூறினார். 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளும் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.