செய்திக்கு, பாடலுக்கு, குழந்தைகளுக்கு என்று தனி அலைவரிசைகள் உள்ளது போல் தற்போது நகைச்சுவைக்கு என்று தனி அலைவரிசையை உருவாக்கியுள்ளது சன் தொலைக்காட்சி.
இன்று முதல் ஒளிபரப்பைத் துவக்கியுள்ள இந்த நகைச்சுவை அலைவரிசையில் 24 மணி நேரமும் நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.
பாடலை ரசிப்பர்களுக்கு எப்போதும் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. எப்போது நினைத்தாலும் செய்தியை அறிந்து கொள்ள செய்திக்கான அலைவரிசையும் உள்ளது. குழந்தைகளுக்கு என்று அவர்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சுட்டி டிவியும் உள்ளது.
இப்போது நகைச்சுவை விரும்பிகளுக்கு என்று இந்த தனி அலைவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புது முயற்சியை சிரித்து வரவேற்போம்.