புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விஜய் டிவியில் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு காபி வித் அனு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் பங்கேற்கிறார்.
ஹாரீஸ் ஜெயராஜுடன் அவரது தாயார் ரேச்சல், மனைவி சுமா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
குடும்பத்துடன் பங்கேற்கும் ஹாரீஸ் ஜெயராஜ் தனது இசையார்வம், திருமண வாழ்க்கை, புதிய பட வாய்ப்புகள் குறித்து அனுவுடன் பகிர்ந்து கொள்கிறார்.
அது போல ஹாரிஸின் மனைவியும், அவரது தாயராரும் ஹாரிஸ் பற்றி தங்களது மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படுத்துகின்றனர்.