ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில முக்கிய நிகழ்ச்சிகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
சுஹாசினி தொகுத்து வழங்கும் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சி இனி ஞாயிறுக்கிழமை 1.30க்கும், ஜேக்கப், மாறன் இணைந்து நடத்தும் காமெடி பஜார் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
ஸ்டான் உங்களுடன் நிகழ்ச்சி பகல் 3 மணிக்கும், சண்டே மூவி மாலை 4 மணிக்கும், சொக்குதே மனம் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
கோலிவுட் டைரி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கும், கவுண்ட் டவுன் செவ்வாய் கிழமை இரவு 7 மணிக்கும், டேக் 5 புதன் 7 மணிக்கும், கிச்சு கிச்சு டாட்காம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கும், செம சீன்மா வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கும், கிட்ஸ் நியூஸ் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
கோலிவுட் கோர்ட் சனிக்கிழமை இரவு 10 மணிக்கும், அரி கிரி அசெம்பிளி திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகும்.