Publish Date: Sat, 30 Aug 2008 (10:49 IST)
Updated Date: Sat, 30 Aug 2008 (10:49 IST)
டெலிஜும் தயாரிப்பில் குஷ்பு தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி ஆறு ஆண்டுகளைக் கடந்து தற்போது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், பணத்தையும் வெல்லும் வகையில் நடத்தப்படும் இந்த ஜாக்பாட் நிகழ்ச்சி ராபா விருதையும் பெற்றுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
7ம் ஆண்டில் இன்னும் சிறப்புடன், புதிய அரங்கில் ஜொலிக்க உள்ளது ஜாக்பாட்.