Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை ‌சி‌ன்னத்துளிகள்

Advertiesment
சின்னத்திரை ‌சி‌ன்னத்துளிகள்
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (11:44 IST)
சி‌ன்ன‌த்‌திரை‌ப் ப‌ற்‌றிய ‌சி‌‌ன்ன‌ ‌சி‌ன்ன‌த் தகவ‌ல்களை இ‌ங்கு‌த் தரு‌கிறோ‌ம்.

ச‌ன் டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பாகு‌ம் செல்லமடி நீ எனக்கு தொட‌ர் முடிவடைவதை அடு‌த்து அபிநயா கிரியேஷன்ஸ் தரவிருக்கும் புதிய தொடர் திருப்பாவை. செல்லமடி தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவே‌ல் தா‌ன் ‌திரு‌ப்பாவையையயு‌ம் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம் எ‌ல்லாமே ‌திரு‌ப்பாவை தொடரின் தயாரிப்பாளர் ஜே.கே.வே பா‌ர்‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ர்.

webdunia photoWD
இய‌க்குந‌‌ர் ‌‌சிகர‌ம் கே.பாலச்சந்தரின் தொடராக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌‌திரை‌ப்படமாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி அதில் ‌நி‌ச்சய‌ம் `கவிதாலயா' கிருஷ்ணனு‌க்கு எ‌ன்று ஒரு இட‌ம் இரு‌க்கு‌ம். அத‌ற்கு த‌ற்போது வெ‌ளிவ‌ந்து ஓடி‌க் கொ‌‌ண்டிரு‌க்கு‌ம் பால‌ச்சந்த‌ரி‌ன் தயாரிப்பான குசேலன் படத்திலும் `கவிதாலயா' கிருஷ்ணன் நடித்திருந்தார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்‌த‌க்கது.

டைரக்டரு‌ம், கு‌ட்டி ப‌த்‌மி‌னி‌யி‌ன் கணவருமான பிரபுநேபால், ‌மீ‌ண்டு‌ம் இய‌க்குந‌ராக உ‌ள்ளா‌ர். ஜெயா டிவிக்கு ஒரு கவ‌ரிமா‌ன் எ‌ன்ற தொடரையு‌ம், ஜி டிவிக்கு அழகான ராட்சசி என்ற தொடரையு‌ம் இய‌க்க உ‌ள்ளா‌ர்.

கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌ம் மகரா‌‌சி தொட‌ர் த‌ற்போது ர‌சிக‌ர்க‌ளி‌ன் பேராதரவுட‌ன் வெ‌ற்‌றி‌ப் பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil