2006ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளதால் பிற்பகல் 2 மணி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2006 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.
இதையொட்டி நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பும், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.