மேகலா தொடரை இயக்கிக் கொண்டிருக்கும் டைரக்டர் விக்ரமாதித்தனுக்கு சினிமா தயாரிக்க அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மேகலாத் தொடர் முடிந்ததும் பெரியதிரையில் இயக்க உள்ளார்.
ஒரே நேரத்தில் சினிமாப் படங்களுக்கும், சின்னத்திரை தொடர்களுக்கும் வசனம் எழுதி கலக்கிக் கொண்டிருக்கிறார் வசனகர்த்தா கே.கோபிநாத்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தனது சொந்த திறமையை வெளிக்கொணரும் வகையில் நடிகர் சாய்ராம், இசைக்குழு ஒன்றை நடத்தி, அதில் பாடவும் செய்கிறார். சபாஷ் சாய்ராம்.
பழம்பெரும் சினிமா நடிகர் பாலாஜி விரைவில் சின்னத்திரையில் தடம்பதிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மேஜிக் தொடரில் ராஜா வேடம் கட்டியுள்ளார் பாலாஜி.