Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் தொலைக்காட்சியில் மறக்க முடியுமா?

Advertiesment
மக்கள் தொலைக்காட்சியில் மறக்க முடியுமா?
, வெள்ளி, 25 ஜூலை 2008 (17:00 IST)
ஆட்டோ சங்கர், சந்தனக் காடு போன்ற நிஜக் கதைக¨ ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி தொடர் மறக்க முடியுமா?

1967 ஜனவரி 12ஆம் தேதியை எம்ஜிஆர் ரசிகர்கள் பலராலும் மறக்க முடியாது. அன்றைய தினம் நடிகவேல் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். உயிரை பறிக்காமல் குரலை பறித்துக் கொண்டது அந்த குண்டு.

தன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எம்.ஜி.ஆரை ஏன் சுட்டார் ராதா என்ற மர்மம் இன்னும் அவிழாமலேயே இருக்கிறது. கையில் கம்பியிருந்திருந்தால் கம்பால் சண்டை போட்டிருப்போம்.

கையிலிருந்தது துப்பாக்கி... சுட்டுக் கொண்டோம் என எம்.ஆர். ராதா சாதாரணமாக கூறிய விளக்கம் சாதாரணமானதுதானா?

இந்த வரலாற்று நிகழ்வு மீதான கேள்வகிள் ஆயிரம். அத்தனையும் அவிழ்க்கும் விதமாக வரும் திங்கள் முதல் தொடங்குகிறது. மறக்க முடியுமா தொலைக்காட்சி தொடர்.

ஜனங்கள் மனங்களில் தொடர் இடம் பிடிக்கிறதோ இல்லையோ, டிஆர்பி ரேட்டிங்கில் இடம் நிச்சயம்.

Share this Story:

Follow Webdunia tamil