ஈரநிலம் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புவனேஸ்வரி தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார்.
பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் மற்றும் வசந்தம் வந்தாச்சு உட்பட சில படங்களில் நடித்தவர் நந்திதா.
இவர் தற்போது சினிமாவை கைதுறந்துவிட்டு சின்னத்திரைக்கு வருகிறார்.
பெண், அஞ்சலி தொடர்களை தயாரித்த அனிக்ஷா புரொடக்ஷன் புவனேஸ்வரித் தொடரைத் தயாரிக்கிறது.
இத்தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பிறந்த வீட்டுக்கும், தனது தந்தையின் தங்கை வீட்டுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு இடையே சிக்கும் நந்திதா எப்படி அதனை போராடி வெற்றி பெறுகிறார் என்பதுதான் தொடரின் மையக் கதை.