Entertainment Tvtime News 0807 09 1080709015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மீ‌ண்டு‌ம் துவ‌ங்கு‌கிறது சூ‌ப்ப‌ர் ‌சி‌ங்க‌ர்

Advertiesment
‌மீ‌ண்டு‌ம் துவ‌ங்கு‌கிறது சூ‌ப்ப‌ர் ‌சி‌ங்க‌ர்
, புதன், 9 ஜூலை 2008 (11:18 IST)
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜுனியரைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் -2008க்கான தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான தேடல் மீண்டும் துவங்கவுள்ளது.

இதன் முதற்கட்ட குரல் தேர்வு இரண்டு வாரங்களாக கோவை மற்றும் திருச்சியில் நடந்து முடிந்தது. எணணற்ற பாடகர்கள் தங்களின் கோவை மற்றும் திருச்சியில் பங்கேற்றனர். அவர்களில் கோவையில் 16 பேரும் திருச்சியில் 15 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோவை நடுவர்களாக எஸ்.பி. ஷைலஜா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, திருச்சி நடுவர்களாக மஹதி, மாதங்கி பங்கு பெற்றனர்.

சென்னை நேர்முகத் தேர்வில் பின்னணி பாடகர்கள் சுனிதா சாரதி மற்றும் தீபன் சக்ரவர்த்தி ஆகியோர் நடுவர்கள். தகுதிச் சுற்று நடுவர்களாக பின்னணி பாடகர்கள் பிரசாந்தி, ராஜலட்சுமி மற்றும் விநயா பங்கு பெற்றனர்.

வெற்றி பெறும் பாடகருக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைப்பதோடு தமிழகத்தின் அடுத்த பிரம்மாண்ட குரலாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு `சூப்பர் சிங்கர் 2008' நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பா‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil