ஜெயா பிளஸ் அலைவரிசையில் மருத்துவர்களுடன் பொதுமக்கள் உரையாடும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஹலோ டாக்டர் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
நேயர்கள் தொலை பேசி வழியாக தங்களது சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கலாம். அவர்களுடைய நோய் குறித்த மருத்துவ ஆலோசனை விரிவாக சொல்லப்படும்.
மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் பொதுவான கேள்விகளைக் கேட்டு மருத்துவர் விளக்கம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பார்கள்.