மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தனக்காடு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியை சொல்லும் இந்தத் தொடரில் வீரப்பனின் குழந்தைப்பருவம் முதல் திருமணம், சந்தனக்கடத்தல், பங்காளிகள் கொலை, தன்னை அழிக்கவந்த வன இலாகா அதிகாரிகளை அழித்தது, சில தீவிரவாதக் கும்பல்களுடன் நட்பு என அனைத்து சம்பவங்களும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன.
தற்போது வீரப்பனை வீழ்த்த காவல்துறை வகுத்த திட்டங்களும், அந்த திட்டத்தில் வீரப்பன் எப்படி சிக்கவைக்கப்பட்டான், அந்த திட்டம் எப்படி வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது என்பது வரையிலான காட்சிகள் எந்த கலப்படமும் இல்லாமல் உண்மையான தகவல்களைக் கொண்டு காட்சிகளாக்கப்பட்டுள்ளன.
சந்தனக்காடுத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று தொடரின் இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.