Entertainment Tvtime News 0806 21 1080621018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை செ‌ய்‌திக‌ள்

Advertiesment
சின்னத்திரை செ‌ய்‌திக‌ள்
, சனி, 21 ஜூன் 2008 (12:47 IST)
பல ‌சி‌ன்ன‌த்‌திரை தொட‌ர்க‌ளி‌ல் நடி‌த்து ர‌சிக‌ர்க‌ளி‌ன் கவ‌ர்‌ந்த நடிகை ரேணுகா, சிவசக்தி தொடர் மூலமாக மீண்டும் சின்னத்திரைக்கு வரு‌கிறா‌ர். கணவரே ஒரு தயாரிப்பாளர் என்பதால் ரேணுகா, இனி தொடர்ந்து நடிக்கத் தடையில்லை என்கிறார்.

வசனம் எதுவுமின்றி புதுமையாக கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த மாயா தொடர், சூப்பர் சுந்தரி தொடரின் வருகையையொட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. எ‌னினு‌ம் மாயா தொட‌ர் வேறு ஒரு நேரத்தில் தொடருமா என்பது ப‌ற்‌றி இதுவரை எ‌ந்த அ‌றி‌வி‌ப்பு‌ம் இ‌ல்லை.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடு‌ம்போது தவறி விழுந்த நடிகை ஆர்த்தியின் கால் எலும்பு பிசகி விட்டது. இதனால் கா‌லி‌ல் க‌ட்டு‌ப் போ‌ட்டு‌க் கொ‌ண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ஆ‌ர்‌த்‌தி.

கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ர‌சிக‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பி‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌‌ன் ப‌ட்டிய‌லி‌ல் முன்னேறி வருகிறது.

2008-ம் ஆண்டுக்கான சூப்பர் சிங்கரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் விஜய் டிவி தொடர்கிறது. தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான தேடல் சென்னையில் நடந்து வருகிறது.

வட இ‌ந்‌தியா‌வி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம் ‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் ‌பிரபலமான பூ‌ரி ஜகநாத‌ர் ரத யா‌த்‌திரையை டி‌ஸ்கவ‌ரி சேன‌ர் ரத யா‌த்ரா எ‌ன்ற பெய‌ரி‌ல் வரு‌ம் ‌வியாழ‌ன் இரவு 9 ம‌ணி‌க்கு ஒ‌ளிபர‌ப்ப‌ உ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil