நடிகர் வையாபுரி சினிமாவில் நடித்ததோடு, ஒரு சில சீரியல்களிலும் நடித்து வந்தார். இப்போது படங்களில் மட்டும் நடிக்கும் நோக்கில், டி.வி. வாய்ப்புக்களை தவிர்க்கிறார்.
டைக்டர் பிரபு நேபால் தனது நிறுவனத்தின் சார்பில் இயக்கி தயாரிக்கும் `அழகான ராட்சஸி' தொடரும் ஜீ டிவிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரை சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த நடிகை அம்பிகாவை இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்து வருகிறார் பிரபு நேபால்.
நடிகர் விஜய் ஆதிராஜ் தெலுங்குதேசத்தை சேர்ந்தவர். மனைவியோ குஜராத்தை சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் இருவரும் பொது இடங்களில் தமிழில் பேசுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜெயா டி.வி.யில் காமெடி பஜார் நிகழ்ச்சியில் வரும் மாறன், விஜய் டி.வி.யின் `லொள்ளுசபா' விலும் ஆஜராகி விடுகிறார். `லொள்ளு சபா' வில் இருந்த ஜீவா, சாமிநாதன் இருவரும் சினிமாவுக்கு நடிக்கபோய் விட்டதால் இந்த கூடுதல் வாய்ப்பு.
கலைஞர் டி.வி.யில் `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் காம்பியராக இருக்கும் சஞ்சீவ், விஜய்யின் பள்ளிக்கால நண்பர். தொடக்கத்தில் விஜய்யின் சிபாரிசின் பேரில் விஜய் நடித்த ஒன்றிரண்டு படங்களிலும் சஞ்சீவ் நடித்திருக்கிறார்.