Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2006-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள்

2006-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள்
, சனி, 7 ஜூன் 2008 (13:01 IST)
தமிழக அரசின் 2006-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். .

இது கு‌றி‌த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2006-ம் ஆண்டுக்கான ``சின்னத்திரை'' தொடர்கள், நடிகர், நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு ‌நிய‌மி‌த்தது. இ‌ந்த குழு மொத்தம் 14 தொலைக்காட்சி தொடர்களைப் பார்வையிட்டு விருதுக்குரியவர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளை முதலமைச்சர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு விருதுக்குரிய தொடர்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.

webdunia photoWD
அத‌ன்படி, சிறந்த நெடுந்தொடர்: முதல் பரிசு - ``செல்வி'' (ராடன்) ரூ.2 லட்சம் ரொக்கம். 2-வது பரிசு - ``சொர்க்கம்'' (ஏ.வி.எம்) ரூ.1 லட்சம் ரொக்கம். 3-வது பரிசு - சிறந்த வாரத் தொடர் ``அல்லிராஜ்யம்'' (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ.1 லட்சம் ரொக்கம்.

webdunia
webdunia photoWD
சிறந்த சாதனையாளர் - ``கோலங்கள்'' திருச்செல்வம் - ரூ.1 லட்சம் ரொக்கம். வாழ்நாள் சாதனையாளர் - ராணி சோமநாதன் ரூ.1 லட்சம் ரொக்கம். இவர்கள் அனைவருக்கும் ரொக்கப் பரிசுடன் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

webdunia
webdunia photoWD
சிறந்த கதாநாயகன் - அபிஷேக் (மலர்கள்), சிறந்த கதாநாயகி - குஷ்பு (கல்கி), சிறந்த குணச்சித்திர நடிகர் - டெல்லிகுமார் (ஆனந்தம்), குணச்சித்திர நடிகை - தேவிப்பிரியா (சொர்க்கம்), வில்லன் நடிகர் - அஜய் (கோலங்கள்), வில்லன் நடிகை - பிருந்தாதாஸ் (ஆனந்தம்), குழந்தை நட்சத்திரம் - மாஸ்டர் பரத் (மை டியர் பூதம்)

சிறந்த இயக்குநர் - சமுத்திரக்கனி (செல்வி), கதையாசிரியர் - தேவிபாலா (ஆனந்தம்), திரைக்கதை ஆசிரியர் - ராஜ்பிரபு (செல்வி), உரையாடல் ஆசிரியர் - குமரேசன் (அகல்யா), ஒளிப்பதிவாளர் - மாடசாமி (மலர்கள்) படத்தொகுப்பாளர் - பிரேம் (லட்சுமி), பின்னணி இசையமைப்பாளர் - கிரன் (பல தொடர்கள்), பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - ரவிசங்கர் (பல தொடர்கள்), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - பிரமிளா (பல தொடர்கள்), சிறந்த தந்திர காட்சியாளர் - ஈஸ்வர் (சிந்துபாத்)

இவர்கள் அனைவருக்கும் தலா 5 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இத‌ற்காக ‌விருது ‌விழ‌ங்கு‌ம் ‌விழா நட‌த்த‌ப்ப‌ட்டு தமிழக அரசு சார்பில்ம முதலமைச்சர் கருணாநிதி பரிசுகளையும், விருதுகளையும் வழங்கி சிறப்‌பி‌ப்பா‌ர். ‌விழா‌வி‌ற்கான தே‌தி ‌விரை‌வி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil