Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை துளிகள்

Advertiesment
சின்னத்திரை துளிகள்
, சனி, 24 மே 2008 (13:01 IST)
கோலங்கள் தொடரில் வில்லனாக நடிக்கும் டைரக்டர் நட்ராஜின் நடிப்பைப் பார்த்து பலத் தொடர்களில் நடிக்க அழைப்பு வருகிறதாம்.

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன், தற்போது மலேசியாவில் இருந்தபடி அங்குள்ள தொலைக்காட்சிகளுக்கு தொடர்களை தயாரித்துக் கொடுக்கிறார். அந்த தொடர்களில் நடிக்கவும் செய்கிறார்.

அப்பாவைப் போலவே பாடகராக இருந்து வில்லன் நடிகரான மகன், பெரிய, சின்னத்திரைகளில் நடித்தாலும் கால்ஷீட் சொதப்பலில் கைதேர்ந்த மன்னராக இருக்கிறாராம். இது யுகம் யுகமாக நடந்தாலும் இவரது அட்டூழியம் அதையெல்லாம் விஞ்சிவிடுகிறது என புலம்புகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த நடிகை நந்திதா இப்போது சின்னத்திரையில் நடிக்க வந்துவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புவனேஸ்வரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil