விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு சுற்று வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த வாரம் சிவகார்த்திகேயன்- ஐஸ்வர்யா, கிரண்-ப்ரியா, தினேஷ்-ஹரிதா ஆகிய மூன்று ஜோடிகளும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
மீதம் உள்ள 5 ஜோடிகளில் வைல்டு கார்டு சுற்றில் தேர்வாகும் ஜோடி தான் இறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியும்.
இந்த வைல்டு கார்டு சுற்றுப் போட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.