Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விஜ‌ய் டி‌வி‌யி‌ன் ‌விருது வழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி

Advertiesment
‌விஜ‌ய் டி‌வி‌யி‌ன் ‌விருது வழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி
, வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:32 IST)
விஜ‌‌ய் டி‌வி‌யி‌ல் உ‌ங்க‌ள் ஃபேவரே‌ட் யா‌ர் எ‌ன்ற ‌‌விருது வழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்காக ர‌சிக‌ர்க‌ளி‌ன் வா‌க்குக‌ள் சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இரண்டாவது ஆண்டாக கொண்டாடப்படும் ரிலையன்ஸ் மொபைல் விஜய் அவார்டுஸ் நிகழ்ச்சி‌க்காக ஏப்ரல் 06, 2008 முதல் வா‌க்கெடு‌ப்பு நட‌ந்து வரு‌கிறது. நேயர்கள் த‌ங்க‌ள் வாக்குகளை, தாங்கள் விரும்பும் நட்சத்திரங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

ரிலையன்ஸ் மொபைல் விஜய் அவார்‌ட்ஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் நேயர்களிடம் வாக்குகளை நேரடியாக சேகரிக்க பல ஊர்களைச் சுற்றி வெற்றியுடன் திரும்பி வந்துள்ளது குறிப்பிடதக்கது.

107 திரைப்படங்கள், பிரம்மாண்ட படைப்புகள், எழில்மிகு மேடைகள், மிளிரும் நட்சத்திரங்கள் என்று தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியின் ரிலையன்ஸ் மொபைல் விஜய் அவார்டுஸ். அதன் முன்னோட்டம் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ரிலையன்ஸ் மொபைல் favorite திரைப்படம், TVS Flame favourite நடிகை, favourite நடிகர், favourite இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் மொபைல் வாடிக்கையாளர்கள் 51234 என அழைத்து " vijay awards " என கூற வேண்டும். மற்ற மொபைல் வாடிக்கையாளர்கள் "VA" என டைப் செய்து 57827க்கு SMS அனுப்ப வேண்டும்.

விஜ‌ய் டி‌வி‌யி‌ன் இணையதளத்திலும் வாக்குகளை பதிவு செய்யலாம்.

வாக்குகள் ஏப்ரல் 17, 2008 இரவு 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்!

ஞாயிறு, ஏப்ரல் 13, 2008 அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரிலையன்ஸ் மொபைல் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைக் கண்டு உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களுக்கு வாக்களியுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil