கர்நாடகாவில் தமிழ் அலைவரிசைகளை நிறுத்துவதில்லை என்று கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக ரக்ஷன வேதிக§ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கன்ன அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து விவாதிக்க கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கூட்டம் லால்பாக்கில் நேற்று மாலை நடைபெற்றது.
அதில், தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்கள் போல பழகி வருகிறோம். தமிழ் அலைவரிசைகளை மட்டும் நான் நிறுத்தினால் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். இதுவரை எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனே தமிழ் அலைவரிசைகளை நிறுத்தினோம். இனியும் அது தொடர வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.