தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட தொலைக்காட்சி இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம் என்று கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் துறையின் முன்னோடி துறையான திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதத்தில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம்.
தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கன்னட சேனல்களையும் இன்று முதல் நிறுத்தி இருக்கிறோம். அதன் படி 5 சேனல்கள் நிறுத்தப்படுகின்றன.
இதுகுறித்து ஹாத்வே, எஸ்.சி.வி. நிறுவனத்திடம் பேசியுள்ளோம். எஸ்.சி.வி நிறுவனத்தை எதிர்த்து 4ஆம் தேதி நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு மாற்றியுள்ளோம் என்று காயல் இளவரசு கூறியுள்ளார்.