விஜய் டிவியில் மிகப் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் இடம் பிடிப்பது ஜோடி நம்பர் ஒன். இன்று முதல் மற்றுமொரு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.சீரியல்களில் மிக வித்தியாசமாக பள்ளி மாணவ மாணவியரை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட கனா காணும் காலங்களும் மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கலந்து ஒரு கலவையாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் தற்போது துவங்க உள்ள கார்னியர் ·புரூட்டீஸ் விஜய் ஜோடி நம்பர் ஒன்.
அதாவது, கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி, மதன், ராக்கி, மிண்டு, கார்திகா, லொள்ளு சபா புகழ் ஜீவா, டிவி ஸ்டார்ஸ் புகழ் ஐஸ்வர்யா, மதுரை தொடரில் நடிக்கும் அன்பு, நிலா, காதலிக்க நேரமில்லை தொடர் பிரஜின், சந்திரா லக்ஷ¤மணன், சுஹாசினி மற்றும் தொகுப்பாளரான ரிஷி (இக்யூ 2) சார்மிளா (ஜில்லுன்னு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி), ரியல் ஜோடிகளான படவா கோபி அவரது மனைவி ஹரிதா கோபி ஆகியோர் இந்த கார்னியர் ·புரூட்டீஸ் விஜய் ஜோடிகள் ஆவர்.
வெள்ளிக்கிழமையான இன்று துவங்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனிக் கிழமைகளில் 8 மணி முதல் நேயர்களை மகிழ்விக்க வருகிறது.
இந்த மூன்றாவது இன்னிங்சில் வெல்லப்போகும் ஜோடிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையை வழங்குகிறது விஜய் டிவி. இம்முறையும் பெஸ்ட் பெர்·பார்மருக்கான விருதும் பரிசும் காத்திருக்கிறது.