Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடர்

Advertiesment
மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடர்

Webdunia

, புதன், 17 அக்டோபர் 2007 (12:23 IST)
தமிழக-கர்நாடக மக்களிடையே நன்கறிந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை தொடராக்கி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

webdunia photoWD
கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்தனக்காடு தொடர்தான் அது. இது சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கும் தொடராக அமையும்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8-30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

சந்தனக்காடு தொடர் பற்றி இயக்குனர் கவுதமன் கூறுகையில், "வீரப்பன் வாழ்ந்த மேட்டூர் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். வீரப்பன் பற்றி அங்கு வாழும் மக்களிடம் கேட்டறிந்த சம்பவங்கள் அத்தனையும் மனதை உருக்கவல்லவை. அவைகளும் தொடரில் இடம்பெறும். அந்தப் பகுதி மக்களின் இதயங்களில் வீரப்பன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.வீரப்பன் பற்றி மேட்டூர் பகுதி மக்கள் குறிப்பிடும்போது வீரப்பண்ணன் என்றே உரிமையோடு குறிப்பிடுகிறார்கள்.

இந்த தொடர் மூலம் ìறைய நிரபராதிகள் வெளியே வருவார்கள். தொடரில் வீரப்பனின் தவறான நடவடிக்கைகளும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

தொடரில் வீரப்பனாக கராத்தே ராஜா என்பவரும், முத்துலெட்சுமியாக தீபிகா, அர்ஜூனனாக வ.லெனின், காவல் துறை அதிகாரியாக அழகு ஆகியோர் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil