மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியான ஏலேலங்கடி... ஏலேலோ, தமிழின் மரபுப் பாடல்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாற்று நடுவோர், ஏற்றம் இறைப்போர் ஆகியோரின் தாளம் போட வைக்கும் பாடல்கள், தாலாட்டுப் பாடல் என பல்வேறு வகையான பாடலகள் இடம்பெறுகின்றன.
தமிழின் பாரம்பரியத்தை அறிய விரும்புபவர்களுக்கும், இசை விரும்பிகளுக்கும் ஒரு சுகமான அனுபவத்தைத் தரும் இந்தப் பாடல்களில் தமிழ் மணம் வீசுகிறது.
தேர்ந்தெடுத்த பாடல்களை இசையமைப்பாளர் ஆதித்யன் தலைமையிலான குழு பாடி மகிழ்விக்கின்றனர்.
இந்த இனிமையான இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.